புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (15:59 IST)

என்ன தப்பு செஞ்சே ? என்னை கைதி போல அழைத்து வந்தனர் - வசந்தகுமார் எம்.பி., வேதனை!

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆக்கிய தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருவதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர். 
தற்போது வரை விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 % வாக்குப்பதிவும், நாங்குநேரியில் 58. 12 வாக்குப் பதிவும், புதுவை காமராஜ் நகர் தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி 56.16 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை நாங்குநேரி காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து வசந்த குமார் எம்.பி கூறியுள்ளதாவது :
 
நாங்குநேரியில் பரப்புரையில் ஈடுபட்டால் என்னைக் கைது செய்யலாம்; ஆனால் நான் நாங்குநேரில் வழியாக பாளையங்க்கோட்டையில் உள்ள எனது வீட்டுக்குத்தான் சென்றேன். நங்குநேரி வழியாக செல்லக் கூடாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினரான என்னை போலீஸார் கைதி போல அழைத்து வந்தனர் என வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.