1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (15:15 IST)

போலீஸாரின் பிடியில் எம்பி வசந்தகுமார்: நாங்குநேரியில் பரபரப்பு!!

காங். எம்பி வசந்தகுமாரை நாங்குநேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருவதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். 
 
நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடியும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இதில் நாங்குநேரி தொகுதியில் 50 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 110 பேரும் வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்த வாக்குசாவடியாக காணப்படுவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை நாங்குநேரி காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாங்குநேரி தொகுதிக்கு இதற்கு முன் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் வதந்தகுமார். இவர் எம்பி ஆனதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனாலேயே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
 
கடந்த சனிக்கிழமையே இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலிருந்து வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்த நிலையில், வசந்தகுமார் அங்கு செல்ல முயற்சித்ததால் போலீஸாரின் விசாரணை வளையத்திற்குள் வந்திருப்பார் என கூறப்படுகிறது.