செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (20:17 IST)

அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்: தமிழக அரசு

school
அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
 கடந்த சில வருடங்களாக அரசு பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் தற்போது அரசு பள்ளிகளுக்கு மாறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரம் திரைப்பட விழா நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
திரையிடப்படும் சிறார் திரைப்படம் குறித்து சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்து சிறார் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது