செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (10:25 IST)

அதிமுக ஒரு திரைப்படம், பாஜக தான் இயக்குனர்: முத்தரசன்

mutharasan
அதிமுக ஒரு திரைப்படம் என்றும் அந்த திரைப்படத்தை இயக்குவது பாஜக என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் பதவியைப் பிடிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் 
 
இந்த நிலையில் பன்னீர்செல்வம் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பின்னணியிலும் பாஜக இருப்பதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இதுகுறித்து கூறிய போது அதிமுக என்ற திரைப்படத்தை பாஜக என்ற இயக்குனர் இயக்குகிறார் என்று தெரிவித்துள்ளார்