திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (15:43 IST)

உலகளவில் சிறந்த இரண்டாவது திரைப்படம்… ’கடைசி விவசாயி’ க்கு கிடைத்த அங்கீகாரம்!

உலகளவில் திரைப்படங்களை வரிசைப் படுத்தும் LetterBoxd எனும் தளம் வெளியிட்டுள்ள பட்டியலில் கடைசி விவசாயி திரைப்படம் முன்னணியில் உள்ளது.

இயக்குனர் மணிகண்டன் ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வெளியான உலக திரைப்படங்களின் சிறந்தவைப் பட்டியலில் கடைசி விவசாயி திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் RRR 6 ஆம் இடத்திலும், விக்ரம் 10 ஆம் இடத்திலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.