செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (16:44 IST)

தினகரன் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்: சிரிப்பு மூட்டும் அமைச்சர் செல்லூர் ராஜூ!

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் கட்சியை சேர்ந்த மதுசூதனன் படுதோல்வியடைந்தார்.
 
தினகரனின் அசுர வெற்றியும், மற்ற கட்சிகளின் படுதோல்வியும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தினகரனின் வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி சிரிப்பு மூட்டியுள்ளார்.
 
இதுகுறித்து மதுரையில் பேட்டியளித்த அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்கே நகரில் கடந்த முறை அமைச்சர்கள் அனைவரும் தினகரனுக்கு ஓட்டு கேட்டோம். அதன் பின்னர் அவரை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டு மதுசூதனனை வேட்பாளராக அறிவித்து ஓட்டு கேட்டோம்.
 
நாங்கள் மாறி மாறி ஓட்டு கேட்டதால் மக்கள் அனுதாபத்தில் தினகரனுக்கு வாக்களித்துவிட்டனர். அனுதாப அலையால் தான் அவர் வெற்றிபெற்றுள்ளார் என அமைச்சர் கூறியுள்ளது பலருக்கும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினகரனுடைய வெற்றி தற்காலிகமானது என அவர் கூறியுள்ளார்.