செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (15:42 IST)

5 ரூபாய்க்கு கீழ் போன தக்காளி விலை, பொதுதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், மக்கள் பலர் கஷ்டப்பட்டு வந்தனர். ஆனால் தக்காளியின் விலை தற்பொழுது கடும் சரிவை அடைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக தக்காளியின் விலை கிலோவிற்கு 70 ரூபாய் வரை விற்கப்பட்டது. விளைச்சல் குறைவே இந்த விலையேற்றத்திற்கு காரணமென வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு நேர்மாராக தற்பொழுது மலை பெய்ததால், தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பால், தக்காளியின் விலை கிலோவிற்கு 3 முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். பலர் தக்காளியை அறுவடை செய்யாமல், செடியிலே விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.