திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (16:22 IST)

நான் ரஜினி ரசிகன்; கட்சியை அறிவிக்கட்டும் அப்புறம் சொல்கிறேன்: செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆர்க்கு அடுத்து நான் ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும் பிறகு நான் கருத்து கூறுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முதல் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். தனது அரசியல் நிலைபாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக நேற்று கூறினார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
 
நான் எம்.ஜி.ஆர்க்கு அடுத்து ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதற்கான கொள்கைகளை தெரிவித்த பிறகு நான் கருத்து கூறுகிறேன். தற்போதுள்ள நடிகர்கள் நேரடியாக முதல்வராக துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.