1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (15:18 IST)

ஆர்கே நகர் மக்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ!

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்து டெப்பாசிட்டை இழந்தது. இதனை செய்த ஆர்கே நகர் மக்களுக்கு அதிமுகவை சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ வாழ்த்து கூறியுள்ளார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிட்டார். ஆளும் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வியடைந்தார். எதிர்க்கட்சியான திமுக தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுமட்டுமல்லாமல் டெப்பாசிட் தொகையை இழந்தது.
 
இந்நிலையில் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மு.க. அழகிரியின் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில் தர வேண்டும். திமுகவை டெப்பாசிட் இழக்க செய்த ஆர்கே நகர் மக்களுக்கு வாழ்த்துக்கள். தினகரனின் வெற்றி தற்காலிகமானது தான் என்றார்.