செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (18:55 IST)

அடுத்தடுத்து மோதல்… விராலி மலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக விராலிமலை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

‘தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட தொகுதி விராலிமலை. அங்கு காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததால் அவ்வப்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 7 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது மீண்டும் மோதல் எழவே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.