புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:06 IST)

வழியை கூறுங்கள், நாங்கள் செய்கிறோம்: திமுகவுக்கு சவால்விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு விவகாரம் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட பின் பரபரப்பின் உச்சத்தில் சென்றது 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டசபையில் கடும் வாக்குவாதமாக மாறியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த காரசாரமான வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் நீட் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் திமுகவுக்கு ஒரு சவாலை விடுத்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எட்டு மாதத்தில் நீட் தேர்வை நீக்குவோம் என்று திமுக கூறியுள்ளதை அடுத்து நீட் விவகாரத்தில் திமுகவின் யோசனை என்ன அந்த யோசனையை எங்களிடம் கூறினால் நாங்கள் அந்த யோசனையை செயல்படுத்த தயார் என்றும், எதற்காக எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்
 
எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுகிறீர்களே எப்படி ரத்து செய்வீர்கள்? என்ற வழியை சொல்லுங்கள். நாங்கள் அதை செய்து காட்டுகிறோம் என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் இவ்வாறு கேள்வி எழுப்பியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் திமுக நீட் தேர்வை எப்படி நீக்குவது என்பது குறித்து ஆலோசனை தெரிவிக்கவில்லை என்பதும் இனிமேலாவது தெரிவிப்பார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்