நீட் மரணங்களுக்கு திமுகதான் காரணம்! – சீறும் எடப்பாடியார், பாயும் விஜயபாஸ்கர்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (12:47 IST)
தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகளுக்கு திமுகவே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசின் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து நடந்த விவாதத்தில் நீட் தேர்வு குறித்து அதிமுக மேல் பழிபோடுவதாக பேசப்பட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பினார். அப்போது ஆவேசமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை 2010ல் முதன்முதலாக கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அப்போது திமுக காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்ததா இல்லையா? அப்போதே இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராமல் செய்தது திமுக. தமிழகத்தில் தற்போது நடந்துள்ள 13 மாணவர்களின் தற்கொலைக்கும் திமுகதான் காரணம்” என்று காட்டமாக பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ”பாம்புக்கு பால் வார்த்தது யார்? நீட் தேர்வை முதன்முதலில் கொண்டு வந்தது யார்? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது திமுகவிற்கு கை வந்த கலை” என்று பேசியுள்ளார். இதனால் பேரவையில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :