அண்ணன் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்... ஒலித்தது முதல் குரல்!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:48 IST)
நடிகர் சௌந்தரராஜா நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 
 
நடிகராக மட்டும் அல்லாமல் சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருக்கும் நடிகர் சௌந்தரராஜா தனது சமீபத்திய பேட்டியில் சூர்யா குறித்து பேசியுள்ளார். அதில், 
 
சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. அவர்கள் குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள். சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன். பலரும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து ஆதரிக்க வேண்டும்.
 
சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பாக கல்வி துறையில் அவர் வந்தால் சிறப்பாக இருக்கும். இது என்னுடைய விருப்பம் மட்டுமில்லை, பல ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
 
நடிகர் சௌந்தரராஜா வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் நடித்தவர் ஆவார். 


இதில் மேலும் படிக்கவும் :