திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 மே 2023 (16:41 IST)

ரூ.2000 நோட்டு செல்லாது என்று மத்திய அரசு சொல்லவில்லை: விஜய பிரபாகரன்

Vijaya prabhakaran
2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு சொல்லவில்லை என்றும் திரும்ப பெறுவதாக மட்டுமே சொல்லி உள்ளது என்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 
 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது என்றும், இந்த அறிவிப்பால் தேமுதிக தொண்டர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களை சென்று பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை என்று கூறுகிறார். ஆனால் 6 மணி நேரம் மைதானத்தில் உட்கார்ந்து ஐபிஎல் மேட்ச் பார்க்கிறார் 
 
மேலும் விஷச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கே ஐம்பதாயிரம் ரூபாய் நிதியாக முதல்வர் கொடுத்திருக்கிறார், அவருக்கு என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை என்றும் விஜய் பிரபாகரன் தெரிவித்தார்.
 
Edited by Siva