1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

3 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்வு..!

சென்னை
தங்கம் மாற்றம் வெள்ளி விலை கடந்த மூன்று நாட்கள் சரிந்த நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரனுக்கு 160 ரூபாய் தங்கம் விலை  உயர்ந்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5665.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 45320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6134.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49072.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
2 நாள் ஏற்றத்திற்கு சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!