வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (15:54 IST)

2000 ரூபாய் கொடுத்ததால் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்..!

பெட்ரோல் போட்ட பின் 2000 ரூபாய் கொடுத்ததால் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பங்க் ஊழியர் போட்ட பெட்ரோல் உறிஞ்சி எடுத்த சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 2000 ரூபாய் நோட்டு பெறப்படும் என்றும் பேருந்து மற்றும் ரயில்களிலும் டிக்கெட் எடுக்க 2000 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட பிறகு 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார். ஆனால் அந்த நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் ஊழியர் வேறு நோட்டு தருமாறு கூறினார்
 
தன்னிடம் வேறு நோட்டு இல்லை என்று வாகன ஓட்டி  கூறியதை அடுத்து போட்ட பெட்ரோலை வாகனத்தில் இருந்து அந்த பங்க் ஊழியர் உறிஞ்சி எடுத்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva