இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..
திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை இளைஞர் ஒருவர் பழகிய நிலையில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் உடுமலைப்பேட்டை மானுப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியும், சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரானும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை பார்ப்பதற்காக ஆகாஷ் சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டை வந்த நிலையில், மூவரும் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை ஆகாஷ் சென்னையில் இருந்து பார்க்க வந்ததாகவும், அப்போது ஆகாஷ், பள்ளி மாணவி மற்றும் அவரது நண்பர் ஆகிய மூவரும் பைக்கில் ஒன்றாக சென்றதையும் சிலர் பார்த்துள்ளனர்.
மேலும் குளத்தின் அருகே பைக் சென்றபோது, பைக் நிலைதடுமாறி குளத்தில் மூழ்கி மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Edited by Siva