வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஜூலை 2018 (10:23 IST)

கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க சென்னை வந்தார் வெங்கையா நாயுடு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார்.
திமுக தலைவர் உடல்நிலை மோசமானதால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது உடல்நிலையில் தேர்ச்சி உள்ளதாகவும் விரைவில் இயல்பு திரும்புவார் என்று காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.
 
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார். அவரை ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் அவரை சென்னை விமான நிலையத்தில்  வரவேற்றனர்.
 
இதனைத்தொடர்ந்து வெங்கையா நாயுடு இன்று பகல் 12.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிகிறார்.