அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்த வழக்கை சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆளுங்கட்சியின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்து, எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஜனநாயகத்திற்கு எதிராக தமிழக அரசு நடந்து வருகிறது.
இந்த நிலையில், திமுக ஆதரவாளர் என முதல்வர் மெதுவாக சொல்லும் நிலை இந்த வழக்கில் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த அரசில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றும், குற்றவாளிகளுக்கு எதிராக போராடும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
Edited by Siva