வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (21:16 IST)

காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பத்தினர் வருகை

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்க்க மருத்துவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. எனவே கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த விஐபிக்கள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலிடம் விசாரித்துவிட்டு செல்கின்றனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன்பு கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மு.க. ஸ்டாலின், மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி உள்பட அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கருணாநிதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளிவந்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இருப்பினும் அவரை சந்திக்கும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல போவதில்லை என மருத்துவமனைக்கு எதிரே இரவுபகலாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.