நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அதிரடியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் ஒன்று வேலூர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்