திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:35 IST)

கெட்டுப்போன மாட்டிறைச்சி, சிக்கனில் பிரியாணி! – ரெய்டில் அம்பலமான ஹோட்டல்கள் தரம்!

வேலூரில் ஹோட்டல்களில் நடத்திய ரெய்டில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை வைத்து உணவு பொருட்கள் தயாரிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் ஆட்சியர் விடுத்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேலூரில் உள்ள உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கெட்டுப்போன 20 கிலோ மாட்டு இறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவு கலர் பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற கெட்டுப்போன பொருட்களை கொண்டு உணவு தயாரித்த மூன்று ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.