திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:50 IST)

8 மாணவிகளுக்கு கொரோனா: 2 பள்ளிகளை இழுத்து மூடிய நிர்வாகிகள்

குன்னூர் அருகே இரண்டு பள்ளிகளில் 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இரண்டு பள்ளிகளும் இழுத்து மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் குன்னூர் மவுண்ட்ரோடு என்ற பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் உள்ள 5 மாணவிகளுக்கும் அதே பகுதியில் உள்ள மற்றொரு பெண்கள் பள்ளியில் உள்ள மூன்று மாணவிகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்த இரண்டு பள்ளிகளும் இழுத்து மூடப்பட்டது என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் பள்ளிகள் முழுவதும் சானிடைசர் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன