வேலூர் வேட்பாளர்கள் சொத்துமதிப்பு – அப்போ… ? இப்போ.?
வேலூரில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து இப்போது ஒரு கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார் தீபலஷ்மி.
இந்நிலையில் இவர்களின் சொத்துமதிப்பை இப்போது தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த சொத்து மதிப்புக்கும் இப்போது உள்ள சொத்துமதிப்புக்கும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அதிகமாகியுள்ளது. அதிமுக கட்சி சார்பில் போட்டியும் ஏ.சி.சண்முகம் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் கையிருப்புப் பணம் தவிர்த்து ரூ.1.74 கோடி அதிகமாக உள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தனது சில சொத்துகளை விற்றதன் மூலம் அவருக்கும் ஒருகோடி ரூபாய் அதிகமாக வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.