கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா என்பவர் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில், பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படும் நபர், கனடா பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார். இதனால், கட்சி தலைவராக தேர்வு பெறுவதற்கு கடுமையான போட்டி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக வெளியான தகவல் இந்திய ஊடகங்களில் பரவியது. ஆனால் அவர், "கனடா பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. என்னை எம்.பி ஆக தேர்வு செய்த தொகுதி மக்களுக்கு எப்போதும் நன்றி என்று கூறியுள்ளார்.
மேலும், "கடந்த 20 ஆண்டுகளாக, நானும் என் கணவரும் எங்கள் குழந்தைகளை வளர்த்த இந்த அற்புதமான சமூகம் சிறந்தது. இச் சமூகத்திற்கு நன்றி," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva