செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (11:28 IST)

அமமுக-வை கலைக்க முடிவா? சசிகலா போட்டிருக்கும் ஸ்கெட்சே வேற?

சிறையில் இருக்கும் சசிகலா வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தினகரன் கூறினார். 
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் தினகரன் சமீபத்தில் வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார். 
 
அப்படி சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அவர் அமமுகவை கலைக்க திட்டமிட்டிருப்பதாக யூகங்கள் வெளியாகியுள்ளன. ஆம், சசிகலா சிறைக்கு சென்ற போது அமமுக எனும் கட்சி உருவாக்கப்படவில்லை. 
அதேபோல், சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதாவின் சமாதியில், சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சபதம் எடுத்தார். மேலும், அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும் என தெரிவித்து சென்றவர். 
 
எனவே சசிகலா இப்போது வெளியே வந்தாலும், பாஜகவை எதிர்ப்பாரெ தவிர ஜெயலலிதா கட்டிக்காத்து வந்த அதிமுகவை எதிர்க்க மாட்டார் என யூகங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பார்த்தால் அமமுகவை கலைக்கவும் சசிகலா முற்படுவார் என தெரிகிறது. 
 
இதன் காரணமாகதான் வேலூர் இடைத்தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.