”சென்னையிலும் உச்சநீதிமன்றம் வேண்டும்” .. வைகோ கோரிக்கை
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை நிறுவிட வேண்டும் என வைகோ மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மாநிலங்களவையில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தென்னிந்தியர்களும் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட, சென்னையில் உயர்நீதிமன்ற கிளையை அமைத்திட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.