1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Next four days heavy rain in tamilnadu

அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது மழை..

தமிழகம்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களாக சென்னை மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்.

குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath