மோடி குறித்த கேள்விக்கு கடுப்பான வைகோ!!
மோடி குறித்த கேள்விக்கு உயர்ந்த தலைவர் வ.உ.சிதம்பரனாரை பற்றி பேசும் போது நீங்கள் யாரையோ பற்றி கேட்கிறீர்கள் என கோபப்பட்டார் வைகோ.
வ.உ.சிதம்பரனார் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு , கோவை மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு அஞ்சலி செலுத்த இன்று பொது மக்கள் அரசியல் கட்சியினருக்கு தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு மலர் தூய்மை மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வ.உ.சி பல சித்திரவதைகளை அனுபவித்து, செக்கிழுத்த கொடுமை நடந்தது இந்த சிறையில்தான் எனவும்,வ.உ.சி இழுத்த செக்கை தொட்டு பார்த்து வணக்கம் செலுத்த வந்துள்ளேன் என தெரிவித்தார்.
வ.உ.சியின் போராட்ட வரலாற்றை பேசிய அவர், தூத்துக்குடி என்று சொன்னால் வ.உ.சி என்ற பெயர் நீடித்து இருக்கும் எனவும் தெரிவித்தார். இதனிடையே பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலங்களில் வைப்பது குறித்த கேள்விக்கு,உயர்ந்த தலைவரை பற்றி பேசும் போது யாரையோ பேசுகின்றீர்கள் என்று பதில் அளித்தார்.
அதே சமயம் அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியும் செக்கிற்கு மரியாதை செலுத்தி விட்டு வந்த போது வைகோவும், வேலுமணியும் மரியாதை நிமர்த்தமாக சந்தித்து ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர்.