1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (15:43 IST)

இந்திய அரசு பெரும் எங்கள் நாட்டிற்கு உதவிகளை செய்தது: வங்கதேச பிரதமர் புகழாரம்

modi sheik
இந்திய அரசு பெரும் எங்கள் நாட்டிற்கு உதவிகளை செய்தது: வங்கதேச பிரதமர் புகழாரம்
இந்திய அரசு எங்களுக்கு பெரும் உதவி செய்தது என்றும் குறிப்பாக உக்ரைன் நாட்டின் போரின்போதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் போதும் பல உதவிகளை இந்திய அரசு செய்தது என்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ள நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எங்களுக்கு பெரும் உதவிகளை செய்து செய்தது என்றும் இந்தியா மற்றும் வங்காளதேசம் நாடுகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உக்ரைன் போரின் போது இந்திய மாணவர்களை மீட்டது போல் வங்கதேச மாணவர்களையும் இந்திய அரசு மீட்டு கொண்டு வந்தது என்றும் இந்திய அரசுடன் நாங்கள் தெளிவான நட்பு ரீதியிலான நல்லிணக்கம் காட்டுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்த பிரதமர் மோடிக்கு எனது நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்