வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (16:08 IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அதிமுக ஆதாரிக்கும்: வைகை செல்வன்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் திட்டத்தை அதிமுக ஆதரிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து அதனை அமல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் அடுத்த கொள்கையாக உள்ளது 
ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதனால் கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறது 
 
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள் இது குறித்து கூறிய போது ஒரே நாடு ஒரே தேர்தல் என மத்திய அரசு அறிவித்தால் அதனை அதிமுக நிச்சயம் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் 
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் வரும்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்