செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:07 IST)

உள்ளாட்சி தேர்தலில் போட்டி உறுதி, திமுக, அதிமுகவுடன் கூட்டணியா? கமல்ஹாசன்

உள்ளாட்சி தேர்தலில் போட்டி உறுதி என்று கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இரு பெரும் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார் 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு தேர்தல்களிலும் அவருடைய கட்சியினர் அனைவரும் தோல்வியடைந்தனர் என்றும் என்றாலும் தொடர்ந்து கட்சியை நடத்தி வருகிறார். இருப்பினும் கமல்ஹாசன் கட்சியில் இருந்து பல தலைவர்கள் வெளியேறி திமுக உள்பட பல்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் கூறிய கமல்ஹாசன் உள்ளாட்சித் தேர்தலில் இருபெரும் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்