1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (12:27 IST)

கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்: பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடவில்லை என்பதும் ஆனால் தமிழகத்தில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடுவதற்கு முன் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த கோரி வழக்கு ஒன்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு இது குறித்து பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
விரைவில் கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதை அடுத்து அதற்கு முன்னதாகவே கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தின் மூலம் செயல்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்