திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (07:52 IST)

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்துவது எப்படி? சி.பி.எஸ்.இ அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்துவது எப்படி என்பது குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது
 
கடந்த 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் நடப்பு கல்வியாண்டான 2021 - 22 ஆம் ஆண்டில் பொதுத்தேர்வு இரு பிரிவுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது 
 
மொத்த பாடங்களையும் இரு பிரிவுகளாக பிரித்து முதல் பிரிவு மற்றும் இரண்டாவது பிரிவு என தனித்தனியாக இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இந்த இரண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி இறுதித் தேர்வின் மதிப்பெண்ணாக கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கம் ஏற்படும் என்பதால் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாமல் இருப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு கல்வி ஆண்டில் இரு பிரிவுகளாக நடக்கும் என்று தெரிகிறது