1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (08:54 IST)

சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம் நிறுத்தம்: மீண்டும் தொடங்குவது எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தினந்தோறும் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்களிலும் ஏராளமானோர் வரிசையில் நின்று மணிக்கணக்கில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முகாம்கள் செயல்படாமல் உள்ளன என்பது தெரிந்தது. அந்த வகையில் சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று தடுப்பூசி முகாம் போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தடுப்பூசி வந்தவுடன் தடுப்பூசி முகாம் செயல்படும் தேதி நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்ப வேண்டுமென்றும் முகாம்கள் இடைவிடாமல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்