செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (11:51 IST)

ஆகஸ்ட் 1 முதலே கல்லூரிகள் திறப்பு??

மாணவர் சேர்க்கை நடக்கும் கையோடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்தே கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல்.  

 
ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினுடனான் ஆலோசனைக்கு பிறகு அறிவித்திருந்த நிலையில் மாணவர் சேர்க்கையை அடுத்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் பரவலாக எழுந்தது. 
 
இந்நிலையில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் அனைத்து கல்லூரிகளிலும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவர் சேர்க்கை நடக்கும் கையோடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்தே கல்லூரிகள் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.