நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.