வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (19:23 IST)

உதயநிதிக்கு திமுகவில் கிடைக்கவிருக்கும் பதவி இதுதான்!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்தே அவரது மகன் உதயநிதி கட்சியில் முன்னிலைப்படுத்தி வருவதாக கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் மக்களவை திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் முக ஸ்டாலினை அடுத்து உதயநிதியிடமும் சென்று ஆசி பெற்றனர். 
 
உதயநிதியும் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஓய்வின்றி பிரச்சாரம் செய்தார். திமுகவின் வெற்றிக்கு இவரது பங்கும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
 
இந்த நிலையில் உதயநிதியை கெளரவிக்கும் வகையில் அவருக்கு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உதயநிதியோ தனக்கு திமுகவின் தொண்டன் என்ற பதவி போதுமென்று அடக்கமாக கூறி வந்தார்.
 
இந்த நிலையில் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக விரைவில் உதயநிதி அறிவிக்கப்படவுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளிவரும் என தெரிகிறது.
 
உதயநிதி தற்போது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது