புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (14:06 IST)

உதயநிதியோடு கைகோர்க்கும் தடம் இயக்குனர் !

தடம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் தனது நடிப்பில் அடுத்ததாக உருவாகும் சைக்கோ படத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக திரைப்படங்களில் கவனம் செலுத்தாத உதயநிதி இப்ப்போது வரிசையாகப் படங்களில் நடிக்கும் திட்டத்தில் உள்ளார்.

இதையடுத்து உதய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் இயக்குனராக மகிழ் திருமேனி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் திரைக்கதை பணிகளில் இயக்குனர் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் மகிழ் திருமேனி விஜய் சேதுபதிக்கு வில்லனாக ஒருப் படத்திலும் நடித்து வருகிறார்.