செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2022 (14:32 IST)

தீண்டாமை கொடுமை செய்த இருவர் கைது; கடைக்கு சீல்!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் பாஞ்சாகுளம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட  பள்ளி குழந்தைகளுக்கு திண்பண்டங்களை வழங்க முடியாது என திண்டாமை கொடுமை செய்த பெட்டிக்கடை சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பஞ்சாகுளம் கிராமத்தில்  ஒரு பெட்டிக்கடை உள்ளது. இந்தப் பெட்டிக்கடையை மகேஷ்வரன்   மற்றும் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆதி திராவிட பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் கடையில் வந்து பொருட்கள் கேட்டால் வழங்க முடியாது என கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாரிகள் அக்கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர்,  சங்கரன் கோவில்  கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் தாசில்தார் பாபு முன்னியையில் அக்கடைக்குச் சீல் வைக்கப்பட்டு, கடையின் உரிமையாளர்கள்  கைது செய்யப்பட்டனர்.