1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (10:54 IST)

பதவி ஆசை இருப்பவர்கள் அயோக்கியத்தனமான காரியம் செய்வார்கள்: ஓபிஎஸ்-ன் பெரியார் பிறந்த நாள் செய்தி

OPS
பதவி ஆசை இருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆரோக்கியமான காரியத்தையும் செய்து வெற்றிபெற பார்ப்பார்கள் என தந்தை பெரியாரின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பதவி ஆசையில் மிதப்பவர்கள் எப்படிப்பட்ட அற்பத்தனமான, இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர நாட்டுப் பற்று சிறிதளவும் காண முடியாது என தந்தை பெரியாரின் வார்த்தைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் எடப்பாடிபழனிசாமி பெரியாரின் 144வது பிறந்த நாள் குறித்து கூறியிருப்பதாவது: சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் #தந்தை_பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன்.