1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 ஜூன் 2022 (11:26 IST)

வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன்

ttv dinakaran
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது தான் திராவிட மாடலா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்
 
திமுக ஆட்சியை தொஅங்கி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவரது ஆட்சி குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுகவின் ஒரு வருட ஆட்சி குறித்து கூறியிருப்பதாவது:
 
‘இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது. அரசாங்க மேடையில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு, திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை.
 
தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார். திராவிட மாடல் என்றால் என்ன, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் என்று சொல்கிறாரா?
 
தடுமாற்றம் தெரிகிறது இந்த ஆட்சியில், காரணம் பழனிச்சாமி கம்பெனி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் இன்று வருகிறது. விடியல் அரசு, தமிழ்நாடு விடியப் போகிறது என்றும் சொன்னார்கள். ஆனால் இன்று இருண்ட தமிழகம் தான், திமுக எப்போது வந்தாலும் தமிழகம் இருளும். இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது. இந்த ஆட்சி தடுமாறுகிறது. மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்’ என கூறினார்.