1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 4 ஜூன் 2022 (00:04 IST)

திமுக ஆட்சியில் தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது- முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சியில் தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் தலை  நிமிரும் தமிழகம் என்ற பேச்சுப் போட்டி நடைபெற்றது.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது. இதை மக்களும் பார்த்துக் கொண்டுள்ளனர்.

38 மாவட்டங்களில் இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேச்சு, கவிதைக்கு தற்போது மரியாதை உயர்ந்துள்ளது. இந்தப் போட்டிகளைப் பார்த்தபின், எனது கல்லூரி கால நினைவுக்குச் சென்றுவிட்டேன். திராவிர மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும் என்றும் திராவிட மாடல் யாரையும் தாழ்த்தாது உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.