1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (09:03 IST)

12 வருடங்களுக்கு பின் மதுரை - தேனி ரயில் சேவை!

மதுரை - தேனி இடையே 12 வருடங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கியது. 

 
பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். இதன் விவரம் பின்வருமாறு...
 
* பெங்களூரு - சென்னை 4 வழி விரைவு சாலையின் 3 ஆம் கட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
* துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
* ரூ.450 கோடி செலவில் மதுரை - தேனி அகலப்பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
* ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
* ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு 3வது பாதையை பிரதமர் மோடி திறப்பு
 
இதனைத்தொடர்ந்து மதுரை - தேனி இடையே 12 வருடங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கியது. மதுரை - தேனி இடையிலான ரயில் கட்டணத்தொகை ரூ.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.