வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (08:46 IST)

விடிய விடிய பறந்ததா தேசிய கொடி? ஓபிஎஸ் மகன் தொகுதியில் சர்ச்சை!

தேனியில் 8.30 மணியை தாண்டியும் தேசியக்கொடி கீழே இறக்கப்படாமல் இரவிலும் பறந்து கொண்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

 
பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். இதன் விவரம் பின்வருமாறு... 
 
* பெங்களூரு - சென்னை 4 வழி விரைவு சாலையின் 3 ஆம் கட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
 
* துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
 
* ரூ.450 கோடி செலவில் மதுரை - தேனி அகலப்பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
 
* ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
 
* ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு 3வது பாதையை பிரதமர் மோடி திறப்பு
 
தேனி ரயில் நிலையத்தில் வரவேற்பு விழா: 
 
மதுரை - தேனி அகலப்பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைத்த நிலையில் தேனி ரயில் நிலையத்தில் வரவேற்பு விழா நடந்தது. தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், இதில் கலந்துக்கொண்டனர். இந்த விழாவிற்காக ரயில் நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்டமான தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 
 
விழா 6 மணிக்கு மேல் துவங்கியது. அப்போதும் தேசியக்கொடி கிழே இறக்க படவில்லை. விழா நடந்து முடிந்த 8.30 மணியை தாண்டியும் தேசியக்கொடி கீழே இறக்கப்படாமல் இரவிலும் பறந்து கொண்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.