1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (08:25 IST)

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

 ஃபெஞ்சல் புயல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், குறிப்பாக பூஞ்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில், பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ECR மற்றும் OMR சாலைகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு, ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Edited by Mahendran