புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (07:45 IST)

தமிழகத்தில் இன்று 3ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 20,000 சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை 1,600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. சென்னையில் 28 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும், முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போடாதவர்கள் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 3-ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் நாளை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.