1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:36 IST)

சாப்பாடு வேணுமா.. போய் தடுப்பூசி போட்டு வாங்க! – குஜராத்தில் அதிரடி உத்தரவு!

குஜராத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த உணவகங்களுக்கு செல்ல தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் முன்னதாக கட்டுப்பாடுகள் அறிவிப்பதும் பின்னர் கொரோனா குறையும்போது கட்டுப்பாடுகளை தளர்த்துவதுமாக மாநில அரசுகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது தடுப்பூசி தேவையான அளவு கிடைப்பதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பல மாநிலங்களில் மக்கள் தளர்வுகளை பயன்படுத்திக் கொண்டாலும் தடுப்பூசியை தவிர்த்தே வருகின்றனர். இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய குஜராத்தில் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹோட்டல்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.