செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:29 IST)

ஹோட்டலுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்: குஜராதில் அதிரடி உத்தரவு!

கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையாவது செலுத்திய வாடிக்கையாளர்களை மட்டும் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்டுகளுக்குள் அனுமதி. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் குஜராத் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையாவது செலுத்திய வாடிக்கையாளர்களை மட்டும் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்டுகளில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க உணவகங்களின் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.