1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (10:20 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம்: பதிவு எண்கள் மாறி இருப்பதால் குழப்பம்..!

TNPSc
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழக முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் ஒரு சில மையங்களில் தேர்வு தொடங்க தாமதம் ஆகி உள்ளதாகவும் இதற்கு பதிவு எண் மாறி உள்ளதால் ஏற்பட்ட குழப்பமே காரணம் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு வைத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பதை தெரிந்தது. குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நிலையில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் மட்டும் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சென்னை துரைப்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், இன்னும் வினாத்தாள் வழங்கப்படவில்லை
 
எந்தெந்த மையங்களில் தாமதமாகத் தேர்வு தொடங்குகிறதோ, அந்த மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran